தொடருந்தின் முன் பாய்ந்து 27 வயது இளைஞன் உயிரிழப்பு..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஹபராதுவை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
மேலதிக விசாரணை
இந்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து முன் பாய்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
