தமிழர் பகுதியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது
Kilinochchi
Sri Lankan Peoples
Dollars
By Dhilak
கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது 1மில்லியன் அமெரிக்க டொலரும் இந்த டொலரை மாற்றுவதற்கான சான்று பொருட்களுடன் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்