சுவர் இடிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு..!
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Kiruththikan
உயிரிழப்பு
மத்திய மாகாணத்தின் தவுலகல யாலேகொட பிரதேசத்தில் நேற்று (05) இரவு வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
39 வயதுடைய நபர்
உயிரிழந்தவர் யாலேகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

