கனடாவில் பெரும் சோகம் - கல்லூரி வளாகத்தில் 4 பேர் பலி
கனடாவில் உள்ள இராணுவ கல்லூரி வளாகத்தில் 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒண்டாரியோ, கிங்ஸ்டனில் உள்ள ரோயல் இராணுவ கல்லூரி வளாகத்தில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கனடாவின் தேசிய விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கனேடிய தேசிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் ஜோக் ஹோகார்ட், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் ஆகிய 4 இராணுவ பயிற்சி மாணவர்கள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்த கார், கல்லூரில் வளாகத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியதில் 4 பேரும் உயிரிழந்ததாக கல்லூரியின் தலைமை பயிற்சி தளபதி ஜோசி கர்ட்ஸ் கூறியுள்ளார்.
சம்பவ இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், மாணவர்கள் சென்ற வாகனம் அதிகாரிகளால் தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. 4 இராணுவ பயிற்சி மாணவர்களின் மறைவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
My heart breaks for the families and friends of the four officer cadets who lost their lives early this morning in Kingston. The tragic passing of these young Canadians is a devastating loss. To all who knew them: We’re here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) April 29, 2022
