கணேமுல்ல சஞ்சீவ கொலை...செவ்வந்திக்கு உதவியவர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளும், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த வாதங்களை கருத்திற் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்களையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பூஸா சிறைச்சாலையில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் 'சூம்' (Zoom) தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 மணி நேரம் முன்