350 ஐ தொடவுள்ள பாணின் விலை! வெளியான தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
மீனின் விலையில் மாற்றம்
அதேவேளை, பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

