கிழக்குப் பல்கலையில் ஐந்து நாட்களில் ஐம்பது நாடகங்கள் அரங்கேற்றம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (Eastern University, Sri Lanka) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் வருட நடன நாடகத்துறை மாணவர்களின் குறுநாடக விழா நிகழ்வுகள் 7ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில் 5 நாட்களில் 50 குறுநாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றுகைகள் க.தணிகாசலம் அவர்களின் "பிரம்படி எனும் சிறுகதையின் தழுவலாக்கத்தில் வெளிவந்த “விதைப்புணம்” எனும் தலைப்பில் இடம்பெறவுள்ளது.
நாடக ஆற்றுகை
விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் மாலை 5.30 மணியளவில் நிகழ்வுகள் இடம்பெறும்.
குறித்த நாடக ஆற்றுகையானது இராஜமனோகரன் தனுஷாவின் எழுத்துரு மற்றும் நெறியாள்கையில் கலாநிதி. அ. விமலராஜின் இணைப்பாக்காத்தில் அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
