தனது பிறந்தநாளில் தந்தையை அடித்தே கொன்ற மகன் : குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்
Matara
Death
Arrest
By Jaso
தனது 45வது பிறந்தநாளில், வயதான தந்தையை அடித்தே கொன்ற மகன் தொடர்பில் தகவலொன்று வெளியாகி உள்ளது.
81 வயதான முதியவர் ஒருவரான தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மதுவுக்கு அடிமையான அந்த மகன், தனது 45வது பிறந்தநாளான முன்தினம் (10) இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை
மாத்தறை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி நடத்திய பிரேதப் பரிசோதனையில், மார்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களே மரணத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்ததாகக் கூறப்படும் சந்தேகத்திற்குரிய மகன் லோக்கு ருவன், அக்குரெஸ்ஸா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மாத்தறை பிரதம நீதிபதி முன் முற்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்