கால்வாயில் சிக்கிய 10 வயது சிறுமி உயிரிழப்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By pavan
கொத்மலை, வெதமுல்ல பகுதியில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி இன்று(11) உயிரிழந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள “கெமில்டன்” கால்வாயை கடக்க முயன்றபோது, நீரோட்டத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி
வெதமுல்லவத்தை கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்