கனடாவில் 93 வயது முதியவருக்கு அடித்த அதிஷ்டம் -அளவில்லா மகிழ்ச்சியில் அவர்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் 93 வயதான முதியவர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர் பரிசை வென்றெடுத்துள்ளார்.
தோமஸ் கிப்சன் ஏன்ற 93 வயதான நபரே லொட்டோ மெக்ஸ் லொத்தரில் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.
ஒரு மில்லியன் டொலர் பணப் பரிசு
ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த தோமஸ் கிப்சன் செப்டம்பர் மாதம் 27ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் இந்த பரிசுத் தொகையை வென்றுள்ளார். “நீங்கள் ஒரு மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளீர்கள்” என தனது மகன் தமக்கு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பாளர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்க விரும்புவதாகவும், அடகுக் கடன் தொகையை செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணம் பற்றிய கனவு
ஒவ்வொரு லொத்தர் சீட்டு கொள்வனவின் போதும் இந்த தருணம் பற்றிய கனவு தமக்கு இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒன்றாரியோவைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர் பணப் பரிசை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
