இலங்கை கல்வி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - கல்வி அமைச்சர் தகவல்
A D Susil Premajayantha
Sri Lanka
Education
By Raghav
தற்போது நாட்டில் காணப்படும் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில்
இதன் நோக்கமாக சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக நாடாளாவிய ரீதியில் உள்ள 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி