செம்மணி புதைகுழிக்கான நீதியை நிலைநாட்ட பொதுக்கட்டமைப்பு அவசியம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதியைப் பெறுவதற்கு பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஐபிசி தமிழின் மனங்கள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான ஆதாரங்களை தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கில மற்றும் சிங்கள மொழியிலும் வெளியிடுவதன் மூலம் சர்வதேசத்திற்கு இந்த விடயத்தை எடுத்துரைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், செம்மணிப் புதைகுழிக்கு நீதியைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அரியாலையில் இருக்கின்ற சித்திரவதை முகாமாக இருந்த ஜெயா கட்டிடத்தில் இருந்து பேரணியை ஆரம்பித்து செம்மணி புதைகுழியில் நிறைவு செய்யவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேரணி செமம்ணி புதைகுழிக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இந்தப் பேரணிக்கு ஆதரவு தருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |