முச்சக்கரவண்டியில் இருந்து சடலம் கண்டெடுப்பு - கொலையா..!
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Jaso
கொட்டாவ மகும்புர பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த நபர் தொடர்பில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணையில் காவல்துறை

இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என கொட்டாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி