06 மணிநேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய கோழி - பார்க்க படையெடுக்கும் மக்கள்
Kerala
India
By Sumithiran
கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு என்ற அதிசய கோழி தொடர்பான தகவல் வைரலாகிவருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 8:30 மணி அளவில் அந்தக் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24 முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்துள்ளது.
இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்துள்ளனர். 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

