ஒரு லீட்டர் டீசலின் விலை 600 ரூபாய்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தாரளமாக டீசல் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைப்படும் என்றார்.
இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலை எரிபொருள் வழங்கிய போதிலும் அதுவும் தற்போது வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்