தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவரை காணவில்லை - அவசர இலக்கத்திற்கு வந்த முறைப்பாடு!
Parliament of Sri Lanka
Sri Lanka
By pavan
மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் காணாமல்போய் விட்டதாக கேலிக்கையான முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதியன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி தகவலை வழங்கியவர்
இந்த அழைப்பை ஏற்படுத்தி போலி தகவல் வழங்கியது, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு நெருக்கமானவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவசர காவல்துறை பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலித் தகவல்களை வழங்குவதும், முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தகது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி