தமிழர் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்
Vavuniya
Sri Lanka
By Harrish
வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் முதன்முறையாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பதவியாவைச் சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று (29.11.2024) இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி, தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினியினால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் வைத்தியர் திலீபனினால் நேற்று (29) குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
பிரசவிக்கப்பட்ட நான்கு குழந்தைகள்
அத்துடன், பிரசவத்தின் பிறகு தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பிரசவிக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 14 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி