கனடாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு
British Columbia
Canada
World
By Laksi
கனடாவில் வீடொன்றில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பினை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதன்போது,மீட்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு ஒன்பது அடி நீளமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு
அந்நாட்டில் தனிச்சிறப்புடைய விலங்கினங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராட்சத மலைப் பாம்பினை வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
சிறைத்தண்டனை
சட்ட விரோதமான முறையில் இவ்வாறு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதற்காக ஒரு லட்சம் டொலர் அபராதம் அல்லது ஓராண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி