கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை - சிறைக்காவலருக்கு ஆயுள் தண்டனை
Kandy
Sri Lanka Magistrate Court
Department of Prisons Sri Lanka
By Sumithiran
போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட சிறைக்காவலர் ஒருவருக்கு 9 வருட விசாரணையின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இரண்டு கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இந்த சிறைக்காவலர் தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைச்சாலை கண்காணிப்பாளரான எம்.ஜி.மாலக மிஹிர பண்டார என்ற 45 வயதுடைய தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்