பந்து போல் உடலை சுருட்டும் அரியவகை உயிரினம் மீட்பு!
Puttalam
Sri Lanka
By pavan
புத்தளம் - கல்லடி கிவுல பகுதியில் எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி தம்மை பாதுகாத்துக் கொள்ளும் எறும்புத்திண்ணியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) மாலை வீடொன்றின் முற்றத்திலிருந்து இந்த அரிய வகை உயிரினம் வீட்டின் உரிமையாளரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எறும்புத்திண்ணியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் உயிரினம்
வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரால் உயிருடன் மீட்கப்பட்ட இந்த எறும்புத்திண்ணியை தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இந்த அரிய வகை விலங்கினம் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்