அமெரிக்காவில் இருந்து வந்தவர் கொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைப்பு..!

Sri Lanka Police Death
By Kiruththikan Oct 25, 2022 12:38 PM GMT
Report

அமெரிக்காவில் கடற்படை மின் பொறியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் படுகொலை செய்யப்பட்டு மல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதான ரன்பட்டி தேவயலாகே சித்ரானந்த ஜயரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பதுடன் அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளார்.

காவல்நிலையத்தில் முறைப்பாடு

அமெரிக்காவில் இருந்து வந்தவர் கொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைப்பு..! | A Retired Man Was Assassinated

பணியில் இருந்து ஓய்வு பெற்று இலங்கைக்கு வந்த அவர், மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காலத்தை கழித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நபர் இலங்கையில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி முதல் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், மாலம்பே பிரதேசத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாவின் மகன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அநுராதபுரத்திற்கு சுற்றுலா செல்வதாக வீட்டின் உரிமையாளர் கூறிவிட்டு கடந்த வாரம் முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக மல்சிறிபுர வீட்டில் பணிபுரிந்த நபர் தெரிவித்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் வாக்குமூலம் வழங்கிய நபர்

அமெரிக்காவில் இருந்து வந்தவர் கொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைப்பு..! | A Retired Man Was Assassinated

அந்த வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்போது, ​​வீட்டின் அறையொன்றில் உள்ள மின்கம்பத்தில் வாக்குமூலம் வழங்கிய நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மிலிந்த என்ற நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பிரிவு சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் நேரடி வழிகாட்டலில் நேற்று மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ காவல் நாயின் உதவியும் பெறப்பட்டது.

நாயின் தடத்தை பின்தொடர்ந்தகாவல்துறையினர் ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016