விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் - இலங்கைக்கு விரையும் யூரியா ஏற்றிய கப்பல்
Mahinda Amaraweera
Sri Lanka
India
By Sumithiran
யூரியா உரங்களை ஏற்றிய கப்பல்
இம்மாத பருவத்திற்குத் தேவையான யூரியா உரங்களை ஏற்றிய கப்பல் ஜூலை 06 ஆம் திகதி இலங்கைக்கு வரும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் உரத்தொகை
65,000 மெட்ரிக் தொன்களை உள்ளடக்கிய இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த உரத்தொகையை இலங்கை பெறவுள்ளது.
உரம் இறக்கப்பட்டவுடன் பொதி செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி