சிறைச்சாலையில் உயிரை மாய்த்த இளம் கைதி
Sri Lanka Police Investigation
Death
Prisons in Sri Lanka
By Sumithiran
கண்டி - போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக பல்லேகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கண்டி - போகம்பர சிறைச்சாலையில்
நேற்று (20) இரவு 10 மணியளவில் அவர் சிறைச்சாலையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தம்பாவெல - குருதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியதர்ஷன (வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்