நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இளைஞனை அள்ளிச்சென்றது அலை
Sri Lanka Police
Sri Lanka Navy
By Sumithiran
பயாகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் இன்று (05) பிற்பகல் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீவிர தேடுதல்
காணாமல் போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயாகல தியலகொட பிரதேசத்தில் நீராடச் சென்ற போது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் தேடுதலை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி