இரவு விடுதிக்கு சென்று திரும்பியவர்களால் முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கொள்ளுப்பிட்டி இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த மகிழுந்து ஒன்று முச்சக்கர வண்டியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிச் சென்ற மகிழுந்து, காலி வீதியில் அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
தப்பிச் சென்றுள்ள சாரதி
விபத்தின் போது மகிழுந்தில் மூன்று பெண்களும் மற்றுமொரு ஆணும் இருந்ததாகவும், 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் மகிழுந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன்,மகிழுந்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இரவு விடுதியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மகிழுந்தின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
