யாழில் கோர விபத்து! தெய்வதீனமாக உயிர் தப்பிய 7 பேர்
Sri Lankan Tamils
Jaffna
By Independent Writer
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயர்ஸ் ரக வாகனம் பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி
விபத்தில் 7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்கம்பத்துடன் மோதிய வாகனம்
மின்கம்பத்துடன் மோதிய வேகத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வாகனம் கடுமையாகச் சேதமடைந்த போதிலும், அதில் பயணித்தவர்கள் எவ்வித பாரிய காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்