யாழ்ப்பாணம் - வடமராட்சியில் விபத்து! இளைஞன் பலி
Jaffna
Accident
By Vanan
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்