தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (7) பிற்பகல் வெனிவெல்கொல பிரதேசத்தில் வான் ஒன்று மகிழுந்துடன் மோதியதில் ஒரு சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 08, 31, 39, 70 மற்றும் 72 வயதுடைய ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து
காயமடைந்தவர்கள் மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வானில் அத்தனகல்ல கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து வானின் பின்பகுதியில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வான் மீது மகிழுந்து மோதியதில், வேன் மூன்று முறை சுழன்று இடதுபுறம் இருந்த இரும்பு வேலியில் மோதி கவிழ்ந்ததாக தெரிவிக்கபடுகிறது.
மேலும், வான் வேலியில் மோதியதில், 8 வயது சிறுமி ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில். மேலும் ஒரு பெண்ணும் வெளியே தூக்கி எறியப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
