பண்டிகை கால விபத்துகள்: டசின் கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதி
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களின் போது அதிகமான விபத்துக்கள் பதிவாகின்றன.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தொகையில் சுமார் 30 பேர் வரையில் போக்குவரத்து விபத்துக்களால் ஏற்பட்ட காயங்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகளை குறைக்க நடவடிக்கை
அத்துடன், பட்டாசுக்கள் தொடர்பான விபத்தில் காயமடைந்த ஒருவரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளின் போது விபத்துகள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர், எனவே இந்த விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த விபத்துகள் அனைத்தும் தடுக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டும் அதிகாரிகள், பண்டிகைக் காலத்தில் அன்றாட நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்வதன் மூலம் இந்த விபத்துகளைத் தடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
