அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கிவைப்பு
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வச்சன்னதி ஆச்சிரமத்தின் மோகன் சுவாமி, மற்றும் அவரது குழுவினரின் ஏற்பாட்டில் மருந்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தியாவசிய மருந்து பொருட்கள்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இவற்றுள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

4ம் ஆண்டு நினைவஞ்சலி