கெஹல்பத்தர பத்மேவுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட வாய்ப்பு! சிக்கப்போகும் முன்னணி நடிகை
ஒரு பிரபலமான உள்நாட்டு நடிகையிடமிருந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்ததாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகையும் கெஹல்பத்தர பத்மேவும் துபாயில் நடந்த புத்தாண்டு விருந்தில் சந்தித்ததாகவும் அங்கு அவர் துபாயைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் என்று நடிகைக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, தனது போலி அடையாளத்தால் சம்பந்தப்பட்ட நடிகை அந்த திரைப்பட அழைப்பை வழங்கியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துபாய்க்கு அடிக்கடி பயணம்
எவ்வாறாயினும், தொடர்புடைய நடிகை துபாய்க்கு அடிக்கடி பயணிப்பவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட தொலைபேசிகளில் உள்ள தரவுகளை ஆய்வு செய்தபோது, அவருடன் தொடர்பில் இருந்த பல மாடல்கள் மற்றும் நடிகைகளிடம் சிஐடி ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
அவர்களில் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் 2022 இல் துபாயில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் பத்மேவை அடையாளம் கண்டுகொண்டதாக கூறியுள்ளனர்.
வாக்குமூலம்
இதேவேளை, கெஹல்பத்தர பத்மே மற்ற ரசிகர்களைப் போலவே தங்களுடன் புகைப்படம் எடுத்ததாகவும், அவருடன் வேறு எந்த உறவும் இல்லை என்றும் நடிகைகள் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், கெஹல்பத்தர பத்மேவை திரைப்படங்களைத் தயாரிக்கவும் நடிக்கவும் அழைத்ததாகக் கூறப்படும் முன்னணி நடிகையிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்படி, அடுத்த சில நாட்களில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |