அதானி குழுமத்திற்கு மன்னாரில் காற்றாலை அமைக்க தற்காலிக அனுமதி
மன்னாரில் காற்றாலை அமைக்க அதானி கிரீன் எனர்ஜி குழுமத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தள பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அதானி கிரீன் எனர்ஜி குழுமத்திற்கு மன்னாரில் 286 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை திட்டங்களுக்காக 500 மில்லியன் டொலர் முதலீட்டிற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
1) Met officials of CEB & Sustainable Development Authority today to discuss the progress of renewable energy projects. Adani Green Energy was issued Provisional Approvals for 2 Wind projects of 286MW in Mannar & 234MW in Pooneryn for an Investment of over USD 500 Million. pic.twitter.com/1I5Pk4o07M
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 16, 2022
இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 அடுத்த வாரம் செயன்முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 26 திட்டங்களின் புதுப்பிக்கத்தக்க முன்மொழிவுகள், விரிவாக்கல் திட்டங்களுடன் விரைவுபடுத்தப்படுவதற்கு தற்காலிக ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
YOU MAY LIKE THIS