ஆளுநர்கள் நியமனம் -மொட்டு -யானை புரிந்துணர்வு
SLPP
Government Employee
UNP
By Sumithiran
மாகாண ஆளுநர்கள் நியமனத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே பதவிகளை பிரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது ஆளுனர் பதவிகளில் ஐந்தை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும்,நான்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐ.தே.க விபரம் வெளியானது
ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆளுனர் பதவிக்கு ஜோன் அமரதுங்க, தயா கமகே, ஆனந்த குலரத்ன மற்றும் ஷமல் செனரத் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அக்கறை காட்டாத மொட்டு
பொதுஜன பெரமுனவின் ஐந்து உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு உறுப்பினர்களையும் நியமிக்கும் பிரேரணைக்கு பொதுஜன பெரமுன அதிக அக்கறை காட்டவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும், புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் நடைபெறும் எனத் தெரியவருகிறது.

மரண அறிவித்தல்