கட்டுநாயக்காவில் கால்பதிக்கிறது சீன விமானம் -வந்து குவியவுள்ள சீன பயணிகள்
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர் சைனா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்காவிற்கு 3 விமானசேவைகளும், கட்டுநாயக்காவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானசேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன.
வாரத்தில் மூன்று நாள்சேவை
அதன்படி, சீனாவின் சிச்சுவான் நகரில் இருந்து புறப்படும் Air China CA 425 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்கவை சென்றடைய உள்ளது.
மேலும், கட்டுநாயக்காவில் இருந்து புறப்படும் Air China CA 426 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் சிச்சுவான் நகரை சென்றடைய உள்ளது.
