இலங்கைக்கான விமானசேவை -எயா பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
Bandaranaike International Airport
Sri Lanka
France
By Sumithiran
நேற்றையதினம் (4) Charles de Gaulle விமான நிலையத்திலிருந்து கொழும்பு-பாரிஸ் இடையில் விமானசேவையை மீண்டும் தொடங்கிய நிலையில், Air France கொழும்புக்கு வாரத்திற்கு மூன்று விமானசேவைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் Air France செயல்பாடுகள் பருவகாலம் மற்றும் 2022-2023க்கான குளிர்கால கால அட்டவணையின்படி இருக்கும்.
வசதியான வழிப்பயணம்

கொழும்பில் உள்ளவர்கள் 170 க்கும் மேற்பட்ட தூரங்களை உள்ளடக்கிய எயா பிரான்சின் உலகளாவிய வலையமைப்புடன், பாரிஸின் சார்லஸ் டி கோலின் வசதியான மையத்தின் ஊடாக மேலும் இணைந்து கொள்ள முடியும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் 787-9 ட்ரீம்லைனர் இந்த வழித்தடத்தில் 30 பிசினஸ் கிளாஸ், 21 பிரீமியம் எக்கொனமி மற்றும் 228 எக்கொனமி வகுப்பு இருக்கைகள் உட்பட 297 இருக்கைகளுடன் பறக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி