அரச உயர்மட்டத்தில் முறுகல் நிலை - மைத்திரி வெளிப்படுத்திய விடயம்
சர்வகட்சி அரசாங்கமே தீர்வு
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரமே குறுகிய காலத்திற்குள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், பிரதமர் மற்றும் அரச தலைவருக்கு இடையே தற்போது இணக்கமான சூழ்நிலை காணப்படவில்லையெனத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“நிபுணர்களின் யோசனைகளுக்கு அமைவாக சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
பிரதமர் மற்றும் அரச தலைவருக்கு இடையே தற்போது இணக்கமான சூழ்நிலை காணப்படவில்லை
இந்த நிலையில், பிரதமர் மற்றும் அரச தலைவர் ஆகியோர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தனித்தனியே கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தன்மையே காணப்படுகிறது.
இந்த நிலைமையானது, தான் அரச தலைவராக இருந்தபோது காணப்பட்ட முறுகல் நிலையை போன்றதாக காணப்படுகிறது” என்றார்.

