இந்தோ - ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இந்தோ - ஆசிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்தனர்.
அங்கு நெசவு பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.
இது தொடர்பில் மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் கருத்து தெரிவித்தார்.
ஆசிய குரூப்
இதேவேளை, தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற் திணைக்களத்தின் நெசவுசாலைக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
