மெய்சிலிர்க்க வைக்கும் பதுங்குகுழி மோதல் - உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்ட காணொளி
ரஷ்ய படையினருடன் இடம்பெற்ற பதுங்குகுழி மோதலை உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பக்முட்நகரை கைப்பற்றும் நோக்கில் தாக்குதலை நடத்திவரும் உக்ரைன் இராணுவம் அந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான காணொளியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கி சுமார் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பதிலடி தாக்குதல்
இதுவரை தடுப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், தற்போது மேற்கத்திய ஆயுதங்களின் அதிகமான கையிருப்பை தொடர்ந்து முதல் முறையாக பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த பதிலடி தாக்குதலில் இதுவரை 8 நகரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய படையினரின் நிலை
The 3rd Assault Brigade continues to provide the world with some of the most high-quality videos from the trench warfare near Bakhmut.
— Visegrád 24 (@visegrad24) June 26, 2023
Here, we can see them liquidate several Russian soldiers from the 57th Mechanized Brigade and capturing many more.
?? pic.twitter.com/8Y4vwRBIK6
இந்த காணொளியில் ரஷ்யாவின் 57 வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட காட்சிகள் மற்றும் சரணடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
