அமெரிக்க அதிபரை சந்தித்த பிரிட்டனி கிறைனர்; காணொளி
போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டனி கிறைனர் அமெரிக்கா அதிபரை சந்தித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பான காணொளியினை அமெரிக்க அதிபர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த பிரிட்னி கிறைனர்
31 வயதான பிரிட்னி கிறைனர் அமெரிக்காவின் மிகப் பிரலமான கூடைப்பந்தாட்ட வீராங்கனையாவார், இவர் 2 தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனையான பிரிட்டனி கிறைனர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் இவர் கைதி பரிமாற்றத்தின் மூலம் ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிபர் மற்றும் பிரிட்டனி கிறைனர் சந்திப்பு
Brittney’s coming home. pic.twitter.com/Yg4t08Pqgc
— President Biden (@POTUS) December 9, 2022
இந்தநிலையில், ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரிட்டனி கிறைனர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பு அமெரிக்க அதிபர் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதனை அமெரிக்க அதிபர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
