அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் சிறிலங்கா விஜயம் - பொருளாதார மீட்சிக்கான சந்திப்பு!
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் அவர் இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் வருகை தொடர்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கிய வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்களை அவர் இந்த விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fruitful discussion of reforms of state-owned enterprises & the petroleum & power sectors w @kanchana_wij, @USTreasury’s Dep Asst Sec Kaproth & myself. These changes are necessary to strengthen SL’s economy. pic.twitter.com/nCFx9qGuMq
— Ambassador Julie Chung (@USAmbSL) October 25, 2022


