பொய்யுரைக்கும் தமிழரசுக் கட்சி - அழிவின் விளிம்பில் தமிழ் தேசியம் : சாடும் கஜேந்திரகுமார்
ஜ.நாவிற்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்தாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்த தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (09.08.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜ.நா சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் சிவில் அமைப்புக்கள் என பலரும் ஒன்றிணைந்து கடிதமொன்றை அனுப்பும் முயற்சியை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
அதாவது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி கட்சிகள் சிவில் அமைப்புக்கள் என பலரது இணக்கத்துடன் கடிதத்தையும் தயாரித்து ஜ.நாவிற்கு அனுப்பியுள்ளோம்.
இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாக தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்ட பேச்சுக்களும் நடைபெற்றது. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களை கூறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காணக...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
