வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்..!
Sri Lanka Army
Sri Lanka Police Investigation
Death
By Kiruththikan
விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பண்டாரவளை காவல்துறை பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
37 வயதுடைய எம்.பி. குணரட்ன என்ற இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இராணுவச் சிப்பாய்
மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த இராணுவச் சிப்பாய்க்கும் அயல்வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
கொலையாளி தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொலையாளியும் உயிரிழந்த இராணுவச் சிப்பாயும் சம்பவம் இடம்பெற்றபோது மதுபோதையில் இருந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இராணுவச் சிப்பாயின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி