போராட்ட களத்தில் துப்பாக்கிசூடு - சிறிலங்கா இராணுவம் விளக்கம்
இராணுவத்தின் விளக்கம்
போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான வீடியோ தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் இராணுவம், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் அரச தலைவர் மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பரவி வரும் காணொளிகள்
சனிக்கிழமை (09) கொழும்பு கோட்டை அரச தலைவர் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரவி வரும் காணொளிகள் பல தொடர்பில் இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான இந்த சமூக ஊடகச் செய்திகளை இராணுவம் கடுமையாக நிராகரிக்கிறது, மேலும் போராட்டக்காரர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக இராணுவம் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
Video footage has emerged of Sri Lanka security forces shooting moments before protesters entered the President's house yesterday pic.twitter.com/eMMgRWyPZK
— NewsWire ?? (@NewsWireLK) July 10, 2022
ஒரு தடுப்பு உத்தி
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதும், வாயில்களின் பக்கவாட்டுச் சுவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் ஒரு தடுப்பு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், எதிர்ப்பாளர்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
