கட்டுநாயக்கவில் அநாதரவாக நின்ற காரால் பரபரப்பு
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
By Jaso
எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வந்து கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த Nissan Bluebird கார் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் விடப்பட்டது.
வழக்கு ஒன்றுடன் தொடர்பு
இந்த கார் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த வெலேகே மாயா சுதேசிகா என்ற பெண்ணுக்கு சொந்தமானதாகும்.

தற்போது பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுடன் குறித்த கார் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த காரை எடுத்துச் சென்றுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்