ஈழத் தமிழ் மக்களுக்கு 13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் தீர்வு - பாஜக பிரமுகரிடம் கோரிக்கை
Sri Lankan Tamils
London
K. Annamalai
By Vanan
இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு 13 ஆம் திருத்தத்துக்கு அப்பாலான உரிமைகளுடன் கூடிய தீர்வை நடைமுறைப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என பாரதிய ஜனதாக கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் பிரித்தானிய தமிழர்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலையின் பிரசன்னத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற அரங்கில் இடம்பெற்ற நிகழ்வின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நிகழ்வு மற்றும் அதன் அடைவுகள் குறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் எமது செய்திப்பிரிவு வினவியிருந்தது.
13 ஆம் திருத்தம் தொடர்பான அண்ணாமலையின் கருத்துக் குறித்தும் இந்த விடயத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் நிலைப்பாடு குறித்தும் ரவிக்குமார் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
