மொட்டுவின் அதிபர் வேட்பாளராக ரணில்..!
SLPP
Ranil Wickremesinghe
President of Sri lanka
Election
By Dharu
அடுத்த அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலின் பொதுவேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் பதவி
ரணிலுக்கு உதவுவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் தயார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி