உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- ரகானேயுடன் இந்திய அணி..!
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-முதல் 11-ம் திகதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று அறிவித்தது.
இந்திய அணியில் ரகானே
இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் விளையாடினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் உபாதைக்குள்ளான காரணத்தால் அவர் இடத்துக்கு ரகானே தேர்வாகி உள்ளார்.
ரகானே சமீபத்திய ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் டெஸ்டில் அனுபவம் வாய்ந்தவர்.
அணி வீரர்கள்
இதனால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ஒட்டங்களை எடுத்துள்ளார்.
இந்திய அணி - ரோகித்சர்மா (தலைவர்) சுப்மன்கில், புஜாரா, வீராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (wc), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்
அவுஸ்திரேலிய அணி - கம்மின்ஸ் (தலைவர்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
