சடுதியாக அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்
Sri Lanka
By Sumithiran
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வங்கி உத்தரவாதம் முப்பது இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏழரை இலட்சம் ரூபாவாக இருந்த தொகையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு
இந்த நிலையில் இந்த தொகை அடுத்த வருடத்தில் இருந்து ரூபா ஐம்பது இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி