இந்தியாவிலிருந்து கிடைத்த மற்றுமொரு பெறுமதியான நன்கொடை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
India
By Sumithiran
இந்தியாவிலிருந்து வந்த மருந்துப் பொருட்கள்
25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும் 260 மில்லியன் பெறுமதியானதுமான ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்தார்.
ஐ.என்.எஸ்.கரியால் கப்பலில் வந்தடைந்த இந்த உதவிப்பொருட்களில் இலங்கையில் உள்ள மீனவர்களின் பயன்பாட்டிற்கான மண்ணெய்யும் உள்ளடங்கியுள்ளது.
மண்ணெய்யும் வந்தது
அடுத்துவரும் நாட்களில் இப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்நாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்களின் முதல் தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்