கொழும்பில் பதற்ற நிலை - பெருமளவு காவல்துறை, விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நீர்த்தாரை பிரயோகம்
இந்த நிலையில், மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் பெருமளவு காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெலிகொம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதேவேளை,18 தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப போராட்டத்துடன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் ரோடு டெலிகொம் தலைமை அலுவலகம் முன்பு ஒரு மணி நேரம் டெலிகொம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர், டெலிகொம் இன்ஸ்டிடியூட் (சத்தம் தெரு, டியூ ரோடு, சர் பரோன் ஜெயதிலக மாவத்தை, லோட்டஸ் ரோடு) சுற்றி ஊர்வலமாக சென்று மீண்டும் டெலிகொம் தலைமை அலுவலகம் வந்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





